Song 226 - Unnai Athisayam

கேட்பதற்கு மேலே அழுத்தவும் !

 

பாடல் 226: உன்னை அதிசயம்

 

உன்னை அதிசயம் காணச் செய்வேன்

நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

என்று வாக்களித்தார் தேவன்

இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் (2)

(உன்னை.......)

 

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே

செங்கடலும் பிளந்தே வழிவிடுமே (2)

தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே

இடைஞலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2)

(உன்னை......)

 

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே

இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே (2)

வாதையெல்லாம் மறைந்தே போகுமே

பாதையெல்லாம் நெய்யாய்ப் பொழிந்திடுமே (2)

(உன்னை.....)

 

வழி நடத்தும் அதிசயம் நடந்திடுமே

காரிருளில் பேரொளி வீசிடுமே (2)

வனாந்திரமே வழியாய் வந்தாலும்

வல்லவரின் கரமே நடத்திடுமே (2)

(உன்னை.......)

Ezra Jean Dougan

ezra book
 
 
 

Nehemiah Jean Dougan

nehemiah book
 

Esther Jean Dougan

esther book